1) 1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு a) கிழக்கு ஜெர்மனி b) செக்கோஸ்லோவாக்கியா c) கிரீஸ் d) துருக்கி 2) கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார். காரணம்: கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டுசேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார். a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை. c) கூற்று சரி. காரணம் தவறு. d) கூற்று தவறு. காரணம் சரி. 3) ‘பனிப்போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர் a) பெர்னாட் பரூச b) ஜார்ஜ் ஆர்வெல் c) ஜார்ஜ் கென்னன் d) சர்ச்சில் 4) கூற்று: மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம்” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார். காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும் a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை c) கூற்று சரி. காரணம் தவறு. d) கூற்று தவறு. காரணம் சரி. 5) மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் a) ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது b) முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது c) ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது d) சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது 6) ட்ரூமன் கோட்பாடு பரிந்துரைத்தது a) கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி b) காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது c) கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது d) அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது 7) கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும். 1) வார்சா உடன்படிக்கை 2) சென்டோ 3) சீட்டோ 4) நேட்டோ a) 4 2 3 1 b) 3 2 41 c) 4 3 2 1 d) 1 2 3 4 8) பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது. a) மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது b) அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச் சுரண்டுவது c) கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது d) ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது 9) லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை எதிர்த்தது a) துருக்கி b) ஈராக் c) இந்தியா d) பாகிஸ்தான் 10) “மூன்றாம் உலகம்” எனும் பதத்தை உருவாக்கியவர் ஆவார். a) ஆல்பிரட் சாவே b) மார்ஷல் c) மோலோடோவ் d) ஹாரி ட்ரூமன் 11) பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க(அ) இந்தோனேசியா 1. ஜவகர்லால் நேரு (ஆ) எகிப்து 2. டிட்டோ (இ) கானா 3. குவாமி நுக்ருமா (ஈ) யுகோஸ்லோவியா 4. கமால் அப்துல் நாசர் (உ) இந்தியா 5. சுகர்னோ a) 5 3 4 2 1 b) 1 3 2 4 5 c) 5 4 3 2 1 d) 1 2 3 4 5 12) அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு ல் நடைபெற்றது a) பெல்கிரேடு b) பெய்ஜிங் c) பாண்டுங் d) பாலி 13) கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தகூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு த�ோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது. காரணம்: மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது. காரணம்: மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர் a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை c) கூற்று சரி. காரணம் தவறு. d) கூற்று தவறு. காரணம் சரி. 14) ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் உருவானது a) 100 உறுப்பினர்களுடன் b) 72 உறுப்பினர்களுடன் c) 51 உறுப்பினர்களுடன் d) 126 உறுப்பினர்களுடன் 15) பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை? கூற்று I: ஐக்கிய நாடுகள் சபையின் த�ோற்றம் பனிப்போரின் த�ொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது. கூற்று II: பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது. கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் த�ொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நாசபைமௌனமான பார்வையாளராகவே இருந்தது a) I,II b) II,III c) I, III d) மேற்கூறப்பட்ட அனைத்தும் 16) சூயஸ் கால்வாய் செங்கடலை இணைக்கிறது a) ஏடன் வளைகுடாவுடன் b) காம்பே வளைகுடாவுடன் c) மத்தியதரைக் கடலுடன் d) அரபிக் கடலுடன் 17) ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை சேர்ந்தவராவார். a) பர்மா b) ஜப்பான் c) சிங்கப்பூர் d) நார்வே 18) கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது. காரணம்: பிரிட்டனின் வெளியேற்றம் 'பிரெக்ஸிட்' (Brexit) என அழைக்கப்படுகிறது. a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை c) கூற்று சரி. காரணம் தவறு d) கூற்று தவறு. காரணம் சரி. 19) கிளாஸ்நாஸ்ட் குறிப்பது a) ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை b) சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப்படுத்தப்படுவதை c) சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை d) பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை 20) சோவியத் யூனியன் இல் சிதறுண்டது a) நவம்பர் 17, 1991 b) டிசம்பர் 8, 1991 c) மே1, 1991 d) அக்டோபர் 17, 1991

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?