கக்கவைத்தல் - உண்மையைக் கூற வைத்தல், கைகூடுதல் - எண்ணிய செயல் நிறைவேறுதல், கதைகட்டுதல் - பொய்க்கதை / இல்லாததைச் சொல்லுதல், காதுகுத்துதல் - ஏமாற்றுதல் , காலில் விழுதல் - மன்னிப்புக் கேட்டல் , இட்டுக்கட்டுதல் - இல்லாததைக் கூறுதல் , ஆழம் பார்த்தல்  - ஒருவரது ஆற்றலைச் சோதித்தல், உரித்துவைத்தல் - ஒரே மாதிரி இருத்தல் , ஒத்தூதுதல் - சொல்வதையெல்லாம் ஆராயாது ஏற்றுக்கொள்ளுதல், ஒருகை பார்த்தல் - சவாலை வென்று காட்டுதல், கையைக் கடித்தல் - நஷ்டமடைதல் , கைவிரித்தல் - இயலாமையை வெளிப்படுத்தல்/ உதவிசெய்ய மறுத்தல், மெய்மறத்தல் - தன்னிலை மறந்து மூழ்கிவிடுதல், பின்வாங்குதல் - திரும்பப் பெறுதல் , கைகொடுத்தல் - உதவி செய்தல் , நோட்டம் பார்த்தல் - உளவு பார்த்தல்/ கவனித்தல் , பம்பரமாகச் சுழலுதல் - விரைவாகச் செய்தல் , மனந்திறத்தல் - வெளிப்படையாகப் பேசுதல் , மனக்கோட்டை - கற்பனை செய்தல்,

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?