1) நன்மை கடைப்பிடி a) எப்போதும் நல்லதேயே நினைக்கவேண்டும் b) எப்போதும் நல்லதேயே நினைத்து நல்லதேயே செய்யவேண்டும் 2) தந்தை தாய்ப் பேண். a) தாய் தந்தையரை அன்புடன் பேணிப் பாதுகாக்கவேண்டும். b) தாய் தந்தையரை பேணிப் பாதுகாக்கவேண்டும். 3) நூல் பல கல்.  a) புத்தகங்களைப் படிக்கவேண்டும். b) அறிவை வளர்க்கும் பல புத்தகங்களைப் படிக்கவேண்டும். 4) மீதூண் விரும்பேல். a) அளவுக்கு அதிகமாக உணவு உண்ணக்கூடாது. b) உணவு உண்ணக்கூடாது. 5) தேசத்தோடு ஒத்துவாழ். a) ஒற்றுமையாக வாழவேண்டும். b) நாட்டு மக்களோடு ஒற்றுமையாக வாழவேண்டும். 6) சோம்பித் திரியேல். a) எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரியாக இருக்கக்கூடாது. b) எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும். 7) நோய்க்கு இடங்கொடேல். a) நோய் ஏற்படாதபடி நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். b) நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். 8) செய்வன திருந்தச் செய். a) ஒழுங்காகப் படிக்கவேண்டும். b) செய்யும் எந்தச் செயலையும் ஒழுங்காகச் செய்யவேண்டும்.

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?