1) 1. என்னைப் பார்த்தால் உன்னைக்காட்டுவேன். அது என்ன? a) வளையல் b) கண்ணாடி c) அடுப்பு d) நகம் e) புத்தகம் f) இலை 2) வினா இல்லாமலே ஒரு விடை. அது என்ன விடை? a) பணிவிடை b) அடுப்பு c) தாள் d) கேள்வி e) பதில்விடை f) அன்பு 3) அடி மலர்ந்து நுனி மலராத பூ என்ன பூ? a) தாழம்பூ b) மல்லிகைப்பூ c) அரளிப்பூ d) சிரிப்பு e) வாழைப்பூ f) முறைப்பு 4) நிலம் நோக்கி வரும். நுரை கக்கிச் செல்லும். அது என்ன? a) மாவிலை b) பனிஅலை c) கோவிலை d) மழலை e) நிழலை f) கடல்அலை 5) பறந்தபடி பாடுவான். உட்கார்ந்தால் ரத்தம் குடிப்பான். அவன் யார்? a) வண்டு b) புறா c) காகம் d) கிளி e) ஈ f) கொசு 6) பாட்டுப்பாடி அழைப்பான் உறவை. கூடி உண்பான் உணவை.அவன் யார்? a) எலி b) நாரை c) மைனா d) காகம் e) குருவி f) மரங்கொத்திப் பறவை 7) இரவு வந்த உறவினர்களைக் காலையில் பார்த்தால் காணவில்லை. அவர்கள் யார்? a) நிலா b) சூரியன் c) நட்சத்திரங்கள் d) சந்திரன் e) மாப்பிள்ளை f) மாமியார் 8) பூப்பூவா இருக்கும். ஆனால் தலையில் வைக்க முடியாது. அது என்ன? a) மல்லிகை b) காலிஃபிளவர் c) வாழைப்பூ d) செம்பருத்தி e) தாழம்பூ f) மத்தாப்பூ 9) கனமான பெட்டி. கதவைத்திறந்தால் மூடமுடியாது. அது என்ன? a) பறங்கிக்காய் b) தங்கப்பெட்டி c) வாழைத்தண்டு d) பணப்பெட்டி e) மாங்காய் f) தேங்காய் 10) ஊரெல்லாம் வம்பு அளப்பான்.ஒர் அறையில் இருப்பான். அவன் யார்? a) மூக்கு b) அறிஞர் c) வாய் d) நாக்கு e) நாட்டாமை f) மீசை 11) பூட்டுச் சாவி இல்லாத பெட்டி. காசு கொடுத்து வாங்கும் பெட்டி. அது என்ன? a) தீப்பெட்டி b) அஞ்சறைப்பெட்டி c) பணப்பெட்டி d) தபால்பெட்டி e) வைரப்பெட்டி f) வெற்றிலைப் பெட்டி 12) அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்க வைப்பான். அவன் யார்? a) புல்லாங்குழல் b) வீணை c) மேளம் d) நடிகர் செந்தில் e) மிருதங்கம் f) கவுண்டமணி 13) இரவல் கிடைக்காதது. இரவில் கிடைப்பது. அது என்ன? a) தலையணை b) தூக்கம் c) கட்டில் d) புத்தகம் e) மெத்தை f) உணவு 14) குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான். அவன் யார்? a) கணினி b) வானொலி c) தொலைபேசி d) பிச்சைக்காரன் e) கிராமபோன் f) தோட்டக்காரன் 15) தலையைச் சீவினால் தண்ணீர் தருவான் அவன் யார்? a) வெந்நீர் b) கடல்நீர் c) கால்வாய்நீர் d) இளநீர் e) கண்ணீர் f) பன்னீர் 16) அரைச் சாண் ராணி, அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன? a) மிருதங்கம் b) முத்துமாலை c) பற்கள் d) கொலுசு e) வெண்டைக்காய் f) ஒட்டியாணம் 17) உப்பினைச் சாப்பிட்டவன் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? a) பாடகன் b) கடல் c) தனயன் d) தச்சன் e) கொம்பன் f) குருடன் 18) ஒன்றைப் பிரிந்து மற்றொன்று வாழாது . அது என்ன? a) குடை b) நாற்காலி c) தோழி d) செருப்பு e) தட்டு f) மாடுகள் 19) என் அப்பா பச்சை. என் மகள் சிவப்பு. என் மகன் கறுப்பு அது என்ன? a) வெள்ளரிப் பழம் b) வெற்றிலை c) தக்காளிப் பழம் d) வாழைப் பழம் e) தர்பூசணிப் பழம் f) மாம்பழம் 20) நெருப்புப்பட்டால் அழுவான். அவன் யார்? a) விரல் b) மனிதன் c) மெழுகுவர்த்தி d) கை e) தோள்பட்டை f) இதயம் 21) அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? a) மூக்குத்தி b) நெற்றிச்சுட்டி c) குதிரை வண்டி d) தோடு e) மாட்டுவண்டி f) வளையல் 22) ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல். அது என்ன? a) பின்கதவு b) மூக்கு c) வாசல் d) நெற்றி e) முன்கதவு f) பள்ளி மண்டபம் 23) கூடவே வருவான் ஆனால் பேசமாட்டான் அவன் யார்? a) தோழன் b) பேருந்து c) புகைப்படம் d) திருடன் e) உந்துவண்டி f) நிழல் 24) பூவில் பிறக்கும் நாவில் சுவைக்கும். அது என்ன? a) தேன் b) பூரி c) குளிர்பானம் d) தேநீர் (டீ) e) வெல்லம் f) காப்பி 25) வெளியில் விரியும். வீட்டில் சுருங்கும். அது என்ன? a) காற்றாடி b) நாக்கு c) வாய் d) குடை e) நெருப்பு f) பானை 26) விளக்கைச் சுமப்பான், இரவில் பறந்து திரிவான். அவன் யார்? a) திருடன் b) வேலைக்காரன் c) மின்மினிப்பூச்சி d) வண்ணத்துப் பூச்சி e) காவலன் f) காவற்காரன் 27) தங்கை தலையிலே பாம்பு. அது என்ன? a) சடை/பின்னல் b) புடலங்காய் c) பீர்க்கங்காய் d) பொடுகு e) தவளை f) எலி 28) உயரப் பறக்கும். ஊன்றுகோலில் நிற்கும். அது என்ன? a) வானம் b) பட்டாம்பூச்சி c) தட்டான் d) கொடி e) கூத்தாடி f) விமானம் 29) மனத்தை உருகவைக்கும் கதை இல்லாமலே நெருங்கியவரை கண்ணீர் விட வைப்பான். அவன் யார்? a) மழை b) கடல்அலை c) புத்தகம் d) பெருங்காயம் e) வெங்காயம் f) குளியல்அறை 30) சட்டென்று வருவான் சத்தமிட்டுப் போவான். அவன் யார்? a) விக்கல் b) தூக்கம் c) நிம்மதி d) குழப்பம் e) பெருமூச்சு f) தும்மல்

2023 MTL Fortnight quiz for sec 1

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?